2026 மே 06, புதன்கிழமை

காணாமல்போன முதியவர் காட்டில் சடலமாக மீட்பு

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கோறளங்கேணி முந்திரித் தோட்டக் காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்புப் பொலிஸ் சார்ஜன்ற் ஏ.இஷட். ஹஸன் தெரிவித்தார்.
 
ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்பதற்கு நீதிபதியின் உத்தரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சொன்னார்.
 
கோரகல்லிமடு வாசியான சின்னத்தம்பி கந்தையா எனும் 80 வயது முதியவர் கடந்த செவ்வாயன்று வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டதாக உறவினர்கள் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
 
தற்போது காட்டில் கிடக்கும் சடலம், காணாமல்போன சின்னதத்தம்பி கந்தையாவினுடையதுதான் என்று அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். நீதிபதியின் உத்தரவு கிடைத்ததும் இன்று மாலைக்குள் சடலம் மீட்கப்பட்டு விடும் என்று ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .