2026 மே 06, புதன்கிழமை

ஹிஸ்புல்லாஹ்வின் அபிவிருத்தி நடவடிக்கைகள்

A.P.Mathan   / 2013 மே 25 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்
 
பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கல்குடாத் தொகுதியில் மீள் குடியேற்றக் கிராமங்களான பாலைநகர், கேணிநகர், தியாவட்டுவான் ஆகிய கிராமங்களில் இடம்பெற்ற பல அபிவிருத்தி நிகழ்வுகளில் நேற்று கலந்து கொண்டார்.
 
பொருளாதார அமைச்சின் தலா ஐந்து லட்சம் நிதியளிப்பில் அமையப் பெறவுள்ள பாலைநகர் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயம் மற்றும் கேணிநகர் மதீனா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் பாலைநகர் மற்றும் தியாவட்டுவான் கிராமங்களைச் சேர்ந்த பத்து குடும்பங்களுக்கு குழாய்க்கிணறு அமைப்பதற்காக நாற்பதாயிரம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டதுடன் அங்கவீனமுற்ற ஒருவருக்கு வியாபாரம் செய்வதற்காக உதவித் தொகை வழங்கப்பட்டதுடன், குர்ஆன் மதரசாக்களுக்கு குர்ஆன் பிரதிகளும் பாய்களும் வழங்கப்பட்டன.
 
பிரதி அமைச்சரின் கல்குடாத் தொகுதி இணைப்பாளர் என்.எம்.கஸ்ஸாலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை வந்துள்ள சவுதி அரேபிய மக்கா அல் போசனா நிறுவனத்தின் பிரதி நிதிகளான முத்இப் முஹம்மட் சயீத் அல் ஆமிதி, முஹம்மத் உமர் சமர்கந்தி, அப்துல் அஸீஸ் முஹம்மட் ஆரிப், அப்துர் ரஹ்மான் இல்துகானி மற்றும் கல்குடா அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி காறூன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .