2026 மே 06, புதன்கிழமை

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு, வாகனேரி – பொத்தானை ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூலை மாதம்  3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் அடங்கிய குழுவினருடன் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் உள்ளடங்களாக வாகனேரி பொத்தானைப் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (24.05.2013) சென்றிருந்தனர்.

பொத்தானைக்குச் சென்ற மாணவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் வேளையில் மேற்படி பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்று வந்த பதுர்தீன் பாயிஸ் (வயது – 14) என்ற மாணவன் நீரிழ் மூழ்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார் பாடசாலை அதிபரையும் இரண்டு ஆசிரியர்களையும் விசாரணைக்கு உட்படுத்தியதோடு இவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் அஜர்படுத்தியிருந்தனர்.

இதற்கினங்க இவர்கள் தொடர்பான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு நேற்று முன்தினம் மீண்டும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த அதிபர், ஆசிரியர்களின் நடவடிக்கைகளை கண்டித்த நீதிபதி கல்வித் திணைக்களத்தின் சட்ட திட்டங்களுககு அமைய கவனமாக நடந்து கொள்ளவேண்டும் என்று எச்சரித்து இவ்விசாரணைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .