2026 மே 06, புதன்கிழமை

விவசாய உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 மே 30 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் சேதனப் பசளை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பொருட்களின் கண்காட்சி நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுணதீவு பிரதேச செயலகம் நடத்திய இக்கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்து வைத்தார்.

இரசாயனப் பசளைகளையும் கிருமிநாசினிகளையும்; பயன்படுத்தாமல், சேதனப் பசளைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட விவசாய உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.  இலைக்கறி வகைகள், மரக்கறி வகைகள், பால் உற்பத்திகள், சிறுகைத்தொழில் பொருட்களும்  இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன.

இதன்போது தொழில் சந்தையொன்றும் நடைபெற்றது.

வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.தவராஜா தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் வவுணதீவு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .