2026 மே 06, புதன்கிழமை

கொள்ளைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2013 மே 30 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்பொடி சசிகுமார், தேவ அச்சுதன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் புதுநகர் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்  தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவர், அவரது சகோதரர், நகைக்கடை உரிமையாளர் ஆகியோரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை  சரீரப்பிணையில் விடுவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் பிணையில் விடுவித்துள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளையின்போது தாலிக்கொடியொன்று, ஒரு சோடி காப்பு, மோதிரம் உள்ளிட்ட தங்கநகைகளுடன் பணமும் சேர்த்து 5 இலட்சம் ரூபா  பெறுமதியானவை கொள்ளையிடப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து பெண் கைதுசெய்யப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இப்பெண்ணின் சகோதரரும், நகைகளை கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .