2026 மே 06, புதன்கிழமை

இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


கிழக்குப் பல்கலக்கழக மாணவர் ஒன்றியத்தின் சுழற்சி முறையிலான இரத்ததான நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு இவ் இரத்ததான நிகழ்வு ஆரம்பமானது.

கிழக்குப் பல்கலக்கழக அரிமா கழகத்தின் அனுசரணையுடனும் கி.ப.க. மருத்துவர்கள் சங்கம் (MEDICS Association) உதவியுடனும் வெற்றிகரமாக இவ் இரத்ததான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்து மூன்றாவது தடவையாக விவசாயபீட மாணவர்களால் இவ்வாறான இரத்ததான முகாம் முன்னெடுக்கபட்டது.

இதில்,  மாணவர்கள் தவிர்ந்த பல்கலக்கழக கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் பலரும் ஆர்வத்தடன் கலந்துகொண்டனர்.    

மீண்டும் மீதமுள்ள கலை, கலாசார பீட, விஞ்ஞான பீட, வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்களை முன்னிலைப்படுத்தி தலா ஒவ்வொரு மாத இடைவெளியில் மேலதிக 3 இரத்த தான முகாம்கள் நடாத்தப்பட இருப்பதாக கி.ப.க. மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.கோமகன் தெரிவித்தார்.     



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .