2026 மே 06, புதன்கிழமை

போராட்டத்தினால் பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு பாதிப்பில்லை: பீடாதிபதிகள்

Kanagaraj   / 2013 மே 30 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று வியாழக்கிழமை நடத்திய இன்றை போராட்டம் முழுமையாக வெற்றியளிக்கவில்லை என்பதுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் வழமைபோல முன்னெடுக்கப்பட்டதாக  கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதிகள் தெரிவித்தனர்.

உபவேந்தரின் நடவடிக்கைகளைக் கண்டித்து அதற்கு எதிராக நடத்திய அடையாள பணி நிறுத்த போராட்டம்; பல்கலைக்கழக நடவடிக்கைகள் எதனையும் பாதிப்புறச் செய்யவில்லை என்றும்  கிழக்குப் பீடாதிபதிகள் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்கைகளும், விரிவுரைகளும், பரீட்சைகளும் இன்று வழமைப்போல இடம்பெற்றதாக பீடாதிபதிகள் தெரிவித்தனர். மாணவர்களின் வருகையும் வழமைபோன்று இருந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர் தொழிற் சங்க அடையாள பணி நிறுத்தத்தைப் புறக்கணித்துவிட்டதாகவும் பீடாதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .