2026 மே 06, புதன்கிழமை

மஞ்சள் கடவையை கடக்க முயன்ற கர்ப்பிணி பெண் விபத்தில் காயம்

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வீதியில் மஞ்சள் கடவையை கடக்க முயன்ற கர்ப்பிணி பெண்ணொருவர் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் குறித்த பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, அரசடி சந்தியிலுள்ள மஞ்சள் கோட்டின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கறுவப்பங்கேணியில் வசித்து வரும் விஜிதா என்பவரே காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .