2026 மே 06, புதன்கிழமை

தேசியக் கல்விக் கல்லூரிக்கு மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தேசியக் கல்விக் கல்லூரிகளில் 2013ஆம் ஆண்டுக்காக ஆசிரிய பயிலுனர்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிக்கு 2013ஆம் ஆண்டுக்காக தமிழ் மொழி மூல ஆசிரிய பயிலுனர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப்பரீட்சை கல்லூரி மண்டபத்தில் கடந்த இருதினங்களாக நடைபெற்றன.

விஞ்ஞானம், கணிதம், சமூககல்வி, தொழில்நுட்பம், நாடகமும் அரங்கியலும், நடனம், சங்கீதம், சித்திரம், ஆகிய பாடங்களுக்காக இலங்கையின் பல மாவட்டங்களில் இருந்தும் 1049 பேர் நேர்முகப்பரீட்சைக்காக தோற்றியதாக மட்டக்களப்பு தேசிய கல்விக் எஸ்.பாக்கியராசா தெரிவித்தார்.

கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா தலைமையில் நடைபெற்ற இந்த நேர்முகப்பீட்சையை கல்லூரி உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் நடாத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .