2026 மே 06, புதன்கிழமை

பிரான்ஸ் தூதுவர் ஏறாவூருக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 02 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபிசொன் அம்மையார் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்தார். 

ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானாவின் அழைப்பின் பேரில் வருகை தந்த கிறிஸ்ரின் ரொபிசொன் அம்மையார், ஏறாவூர் நகர அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேலும், உள்ளூராட்சி சபைகளுக்கு பெரும் சவாலாக உள்ள திண்மக் கழிவகற்றல் சம்பந்தமான முறையான திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில்; அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம்  ஏற்கெனவே முன்வைக்கப்பட்டது. இது தொடர்பிலும் பிரான்ஸ் தூதுவருடன் கலந்துரையாடியதாக ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபிசொன் ஏறாவூர் வாவிக்கரையோர சிறுவர் பூங்காவிற்குச் சென்று வாவிக் கரையோர அழகுபடுத்தல் திட்டத்தையும் பார்வையிட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .