2026 மே 06, புதன்கிழமை

ஆட்சேர்ப்பு திட்டம் தயாரிக்கப்படாமை தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டம்

Kogilavani   / 2013 ஜூன் 03 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
, க.ருத்திரன்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களில் கடமையாற்றிவரும் வரைவிட்ட (சிற்றூழியர்) சேவையைச் சேர்ந்த திணைக்கள ஊழியர்களுக்குரிய ஆட்சேர்ப்பு திட்டம் தயாரிக்கப்படாமை தொடர்பிலான கவன ஈர்ப்பு போராட்டமொன்று இன்று மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கத்தினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

'ஆட்சேர்ப்பு திட்டம் தயாரிக்கும்போது வடக்கு, கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கத்தின் கருத்துக்களும் பெறப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு உள்வாங்கப்படல் வேண்டும்'இ  'நீண்டகால அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் வெற்றிடத்திற்கு அமைவாக சேவை மூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படல் வேண்டும்'இ 'தற்போது சேவையில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படாத வகையில் ஆடசேர்ப்பு திட்டம் தயாரிக்கும்போது வயது, கல்வித்தகமை என்பவற்றில் தற்போது சேவையில் உள்ள ஊழியர்களுக்கு சலுகை வழங்கப்படல் வேண்டும்' போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த கவன ஈர்hப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் ஏ.தினேஸ்குமார், செயலாளர் இ.மணிவன்னன் உட்பட அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

'ஆட்சேர்ப்பு திட்டம் தயாரிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம்', 'பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எமது விடயத்தில் ஏன் இந்த பாராமுகம்', 'நீண்ட கால அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குங்கள்', 'நகரத்தில் சுத்தம் சுகாதாரம் பேனும் எமக்கு இனி வேதனம் இல்லையா' போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

இவர்களின் கவன ஈhப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.துரைராஜசிங்கம் ஆகியோர் இவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .