2026 மே 06, புதன்கிழமை

'காத்தான்குடி குப்பைகள் தற்காலிகமாக வாகரையில் கொட்டப்படும்'

Kogilavani   / 2013 ஜூன் 05 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


காத்தான்குடி நகரசபை பிரிவில் கடந்த ஒரு வாரகாலமாக அகற்றப்படாது இருந்த குப்பைகள் நாளைமுதல் வாகரை பிரதேசத்தில் கொட்டப்படவுள்ளதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் குப்பை கொட்டுவதற்கு இடமின்மையால் கடந்த ஒருவாரகாலமாக குப்பைகள் அகற்றப்படாமல் கிடந்தன. இதனால் வீதிகளில் குப்பைகள் பெருமளவு குவிந்துள்ளதுடன் துர்நாற்றமும் வீசிவருகின்றது.

இந்நிலையில் வாகரையில் குப்பைகளை தற்காலிகமாக கொட்டுவதற்கான அனுமதி மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து பெற்றப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை,  காத்தான்குடியிலுள்ள குப்பைகள் கடந்த சில மாதங்களாக அட்டாளைச்சேனையிலும் கொட்டுப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடியில் குப்பைகளை கொட்டுவதற்கான நிரந்தரமான ஒரு இடம் இன்மைக் காரணமாகவே இவ்வாறு குப்பைகளை வெவ்வேறு பிரதேசங்களுக்கு கொண்டுசெல்லவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .