2026 மே 06, புதன்கிழமை

மின்சார தாக்கத்தினால் மாணவன் வைத்தியசாலையில்

Kogilavani   / 2013 ஜூன் 05 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மின்சார தாக்கத்திற்கு இழக்காகி படுகாயமடைந்த நிலையில் பாடசாலை மாணவர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் இப்றாகீம் முகம்மட் நதீர் (வயது-15) என்ற மாணவனே இவ்வாறு மின்சார தாக்கத்திற்கு இழக்காகியுள்ளார்.

இவர் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .