2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

மதுபானசாலையை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 07 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமீன்மடு பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மூடுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

பாலமீன் மடு பிரதேசத்திலுள்ள வெளிச்ச வீட்டுப்பகுதியில் ஒன்றுதிரண்ட மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேச மக்களும்  திராய்மடு பிரதேச மக்களும் அங்கிருந்து சென்று  குறித்த மதுபானசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மதுபானசாலையை மூடுமாறு கோரி பொதுமக்கள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றையும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

குறித்த மதுபானசாலையை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், ஆர்;ப்பாட்டக்காரர்களிடம் இதன்போது உறுதியளித்தார்.

'நகரிலிருந்து விரப்பட்ட மதுபானசாலை எமது ஊருக்கு வேண்டாம்', 'குடும்பங்களை சீரழிக்கும் மதுபானசாலையை இழுத்து மூடு',  'எமக்கு வேண்டாம் மதுபானசாலை', 'மீறினால் தருவோம் பிரியாவிடை', 'மதுவை ஒழிப்போம் மக்களை பாதுகாப்போம் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

இந்தப் பிரதேசங்களில் உள்ள பொது அமைப்புக்கள், இந்து மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களின் நிர்வாகிகள், விளையாட்டுக்கழகங்கள், மாதர் அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தன.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  சி.யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .