2026 மே 09, சனிக்கிழமை

போஷாக்கு தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 25 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


சர்வதேச போஷாக்கு மாதத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஈச்சிலம்பற்றிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் போஷாக்கு அறிவூட்டல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈச்சிலம்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் வேள்ட்விஷன் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு வெருகல் பிரதேசத்திலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களும் 5 வயதை அடையும் (59 மாதங்கள்) போஷாக்கு குறைவான பிள்ளைகளின் பெற்றோர்களும் வருகை தந்தனர்.

இதன்போது போஷாக்குக் கருப்பொருள் அடங்கிய ஊர்வலம் நடைபெற்றதுடன், கர்ப்ப காலத்திலும் பாலூட்டும் காலத்திலும் மற்றும் 5 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் காலப்பகுதியிலும் துணை உணவூட்டலின் முக்கியத்துவம் தொடர்பில் அறிவூட்டப்பட்டன.

இதேவேளை, தாய்ப் பாலூட்டலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தாய்ப் பாலூட்டல் தொடர்பில் தாய்மார்களுக்கிடையேயுள்ள மூட நம்பிக்கைகளை போக்குவதற்கான அறிவை வழங்குவதற்கு ஈச்சிலம்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தாய்ப்பாலூட்டல் முகாமைத்துவ நிலையமும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்குவதற்குகென  தனியான பிரிவொன்றும் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிகழ்வில் ஈச்சிலம்பற்று சுகாதார வைத்திய அதிகாரி இனுஷ்கா எரந்தி நாணயக்கார, வெருகல் பிரதேச வைத்திய அதிகாரி பாக்கியதுரை வடிவுக்கரசி, வேள்ட்விஷன் போஷாக்கு நிபுணர் டில்கா பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .