2026 மே 14, வியாழக்கிழமை

'ஏறாவூர்பற்று பிரிவில் மாணவர்களின் இடைவிலகள் அதிகரித்துள்ளது'

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில்; மாணவர் இடை விலகல் அதிகமாகவுள்ளது. காரணத்தைத் தேடிப் பார்த்தபோது இந்தக் கிராமங்களில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் தாய்மாரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது' என ஏறாவூர்ப் பற்று செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன்.

'சிறுவர் உரிமைகளில் மிகவும் முக்கியமானது கல்வியாகும். இதனைத் தமது பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு பெற்றோர் அதீத கவனம்; செலுத்த வேண்டும். மாணவர்கள்; தமது படிப்பைக் கைவிட்டு இடைவிலகிச் செல்வதற்கு அவர்களது தாய்மார் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வதும் ஒரு காரணமாக அமைந்து விட்டது. இந்த நிலைமை மாறவேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.

வறிய குடும்பங்களைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'தாய் மார் வெளிநாடு சென்றவுடன் இங்கே வீட்டில் பராமரிப்பு ஏதுமில்லாத நிலையில் பிள்ளைகள் பள்ளிப் படிப்பையும் இடைநடுவில் கைவிட்டுச் சீரழிகின்றார்கள்.

இந்த நிலைமையை பெற்றோர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தற்காலிகமாகக் கிடைக்கும் ஒரு தொகைப் பணத்திற்காக நமது எதிர்கால இளம்; சந்ததியினரின் வாழ்வைச் சீரழிக்கலாமா என்பதை வெளிநாடு செல்லும் பெண்களும் வெளிநாடு செல்ல இருக்கும் பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் களுவன்கேணி, ஐயன்கேணி, பலாச்சோலை, ஆறுமுகத்தான் குடியிருப்புப் பகுதிகளில் மாணவர் இடை விலகல் அதிகமாகவுள்ளது. காரணத்தைத் தேடிப் பார்த்தபோது இந்தக் கிராமங்களில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் தாய்மாரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ஐந்து வயதிற்குட்பட்ட பால்குடிப் பாலகர்களையும் வீட்டில் விட்டு விட்டு பெண்கள் மத்திய கிழக்குக்கு வீட்டுப் பணிப் பெண்களாகச் செல்கின்றார்கள். சட்ட ரீதியாக இல்லா விட்டாலும் சமூக நன்மை கருதி இந்த விடயங்களைத் தடுத்து வருகின்றோம்.

ஆயுத வன்முறைகளால் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையிலும் வறுமையாகியிருக்கும் குடும்பங்களிலுள்ள மாணவர்களைக் கண்டு பிடித்து அவர்களின் இலகுவான போக்குவரத்து வசதிக்காக துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வரும் வேர்ள்ட் விஷன் நிறுவனத்தின் பணி மெச்சத்தக்கதாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .