2026 மே 14, வியாழக்கிழமை

dd

கிழக்கு மாகாண மீலாத் போட்டியில் மட்டக்களப்பு மத்தி வலயம் முதலிடம்

Super User   / 2013 ஜூலை 07 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.எம்.எம்.ரம்ஸான்

கிழக்கு மாகாண மீலாத் போட்டியில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 147 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷெய்ஹ் எம்.ஐ.அப்துல் கபூர் மதனீ தெரிவித்தார்.

தேசிய மீலாத் விழாவையொட்டி கிழக்கு மாகாண மட்டத்திலான மீலாத் போட்டி கடந்த 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் கல்முனையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 147 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலாமிடத்தையும் 100 புள்ளிகளை பெற்று மூதூர் கல்வி வலயம் இரண்டாமிடத்தையும் 84 புள்ளிகளை பெற்று கிண்ணியா கல்வி வலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.

அல்குர் ஆன் முரத்தல், கிராஅத், பேச்சு,கஸீதா, சிறுகதை, கட்டுரை, அரபு எழுத்தணி, கதா பிரசங்கம் உட்பட பல்வேறு பிரிவுகளுக்காக இப்போட்டி நடைபெற்றது. கடந்த நான்கு வருடங்களாக கிழக்கு மாகாண மீலாத் போட்டிகளில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலாமிடத்தை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .