2026 மே 14, வியாழக்கிழமை

dd

ஆனந்தசங்கரிக்கு கௌரவம்

A.P.Mathan   / 2013 ஜூலை 07 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல், எஸ்.ரவிந்திரன்
 
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை கௌரவித்தலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் 80ஆவது அகவை பூர்தி விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
 
களுவாஞ்சிகுடி கிராமத் தலைவரும் முகாமை ஆலய பரிபாலன சபைத் தலைவருமான அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) மற்றும் இ.துரைரெட்ணம், பி.இந்திரகுமார் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வின்போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும், 80 அகவை கொண்டாடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு  மாவட்டத்தின்  தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .