2026 மே 14, வியாழக்கிழமை

பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

Kogilavani   / 2013 ஜூலை 08 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் தொழிற்பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் பயிற்சி நெறிகளுக்கு இம்மாதம் 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் இப்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

வந்தாறுமூலையிலுள்ள தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் பட்டிப்பளை, வாகரை, ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, வவுணதீவு, கிரான், ஆரையம்பதி, ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை, வெல்லாவெளி, கல்லடி போன்ற பிரதேசங்களிலுள்ள 14 தொழிற்பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் 36 பயிற்சிநெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம், ஏ.பீ.சீ. வீதி, வந்தாறுமூலை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு விண்ணப்பதாரிகள் கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 தொழிற்பயிற்சி நிலையங்களினால் நடாத்தப்படும் 47 பயிற்சிநெறிகளுக்கு பயிலுனர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் அண்மையில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .