2026 மே 14, வியாழக்கிழமை

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மேனன் சில்வா பதவியுயர்வு

Super User   / 2013 ஜூலை 08 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், சிவம்பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய மேனன் சில்வா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய அஜந்த சமரகோன் கடந்த முதலாம் திகதி முதல் குருநாகல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மேனன் சில்வா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபராக வி.இந்திரன் கடமையாற்றுவதுடன் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பூஜித ஜெயசுந்தர கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .