2025 மே 05, திங்கட்கிழமை

'சந்தேகத்துக்கிடமானவர்கள் நடமாடினால் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும்'

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'கிராமங்களில் சந்தேகத்துக்கிடமானவர்கள் நடமாடினால் உடனடியாக சிவில் பாதுகாப்புக்குழுவினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ தெரியப்படுத்த வேண்டும்' என மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கான சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

'சந்தேகத்துக்கிடமாக நடமாடுபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் கொள்ளையர்களாக அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களாக இருக்க கூடும். அதனால் சிவில் பாதுகாப்புக்குழுக்கள் இவர்களின் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சிவில் பாதுகாப்புக்குழுக்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி கெட்ட செயல்கள், குற்றச் செயல்களை இல்லாமல் செய்ய முன் வரவேண்டும். சிவில் பாதகாப்புக்குழுக்களை சக்திமிக்கதாகவும் வலிமை மிக்கதாகவும் மாற்றியமைக்கவேண்டும்.

ஏதாவது குற்றச் செயல்கள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றால் அதை உடனடியாகவே பொலிஸாருக்கோ அல்லது கிராம உத்தியோகத்தருக்கோ அறிவிக்க வேண்டும்.


இன்று சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றவர்களை அடையாளப்படுத்தி அவர்களை பொலிஸாருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

குற்றச் செயல்களற்ற பிரதேசமாக நமது பிரதேசங்களை மாற்றியமைக்க வேண்டும். இதற்காக சிவில் பாதுகாப்புக்குழுக்கள் பாடுபட வேண்டும்.

சிவில் பாதுகாப்புக்குழுக்கள் பொது வேலைத்திட்டங்களில் ஈடுபடவேண்டும். சுகாதார வேலைத்திட்டம் டெங்கு ஒழிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு, சிரமதானம்போன்ற வற்றில் ஈடுபடுவதுடன் சிறுவர் விளையாட்டு, சமய கலாசார நிகழ்வுகளையும் நடாத்த வேண்டும்' என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X