2025 மே 05, திங்கட்கிழமை

மீனவர் நுண்கடன் திட்டம் அறிமுகம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன் 


மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நோக்காகக்கொண்டு முதன்முறையாக மீனவர் நுண்கடன் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு கடல்தொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை பகல் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நோக்காகக்கொண்டு மீன்பிடித்துறை அமைச்சு மற்றும் தேசிய மீனவர் சம்மேளனம் இணைந்து இந்த திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது.

மன்னார், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் மீனவர் சம்மேளனம் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட சுமார் 50பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் ஜோர்ஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய நுண்கடன் திட்ட ஆலோசகர் தயானந்த, மீனவர் மகா சம்மேளன தலைவர் திசாநாயக்க, சர்வதேச மீனவர் சங்க பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மாவட்ட மட்ட மீனவர் அமைப்பு மற்றும் கிராமிய மீனவர் அமைப்புகளுக்கு இந்த நுண்கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அறிமுக நிகழ்வில் நுண்கடன் திட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டவர்கள் கலந்துகொண்டு நுண்கடன் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் நன்மைகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

இந்த நுண்கடன் மூலம் மீனவர்கள் தங்களது மீன்பிடியை அதிகரித்து அதன் மூலம் பிற உற்பத்திகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்ளமுடியும் என உதவி பணிப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X