2025 மே 05, திங்கட்கிழமை

மின் பாவனையினை குறைப்பது குறித்து ஆராய்வு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், மாணிக்கப்போடி சசிகுமார்


மின் பாவனையினை குறைத்து அதற்கு நிகரான ஏனைய வலு சக்தியின் பாவனையை அதிகரிப்பது தொடர்பில் கிராமிய மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் மின்சாரசபைக்கு ஏற்படும் நட்டத்தினை குறைப்பது தொடர்பிலான அறிவூட்டுவது தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மட்டக்களப்பு நடைபெற்றது,
மின்வலு சக்தி அமைச்சும் கிழக்கு மாகாண மின்வலு சக்தி அமைச்சும்இணைந்து இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை இதற்கான விரிவான நடவடிக்கையினை மேற்கொண்டது.

இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரச திணைக்களங்களின் தலைவர்களையும் அறிவுறுத்தும் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அதுஸித்த சுகத்தபால தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் கிழக்கு மாகாண மின்வலுசக்தி வீதி அபிவிருத்தி மற்றும் நீர்பாசன அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார்,இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் திட்ட முகாமையாளர் அத்துல ஜயதிலக,இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் சிரேஸ்ட ஆலோசகர் அனுருத்த காரியவசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களின் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிராமிய மட்டத்தில் மின்சாரம் சேமிக்கப்படுவதன் முக்கியத்துவம் அவற்றினை எவ்வாறான வழிகளில் சேமிக்கலாம் மின்சாரத்துக்கு மாற்றீடாக உள்ள சக்தி வலுக்களின் பாவனைகள் என்பன தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இது தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள அறியாமையினை விளக்கி அவர்களுக்கு மின்சக்தியினால் ஏற்படும் செலவீனங்களை குறைத்து அவர்கள் மத்தியில் சேமிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் விசேடமாக கொண்டுவரப்பட்டதாகும்.

இந்த செயலமர்வில் பங்குகொண்டுள்ளவர்கள் இது தொடர்பான விழிப்புணர்வை கிராம மட்டத்தில் மேற்கொள்வதற்கான விசேட கருத்துரைகளும் இதன்போது வழங்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X