2025 மே 05, திங்கட்கிழமை

வவுணதீவில் இரு கட்டடங்கள் திறந்துவைப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.நூர்தீன்
,மாணிக்கப்போடி சசிகுமார்

வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் கரடிப்பூவல் மற்றும் புளியடிமடு ஆகிய கிராமங்களில் அரச சார்பற்ற நிறுவனத்தினால் சுமார் 18 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு கட்டடங்கள் நேற்று வெள்ளிக் கிழமை மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டன.

சுவிடன் கூட்டுறவு நிறுவனத்தின்(கிழக்கு மாகாணம்)அனுசரணையுடன் காவிய பெண்கள் அமைப்பும் இணைந்து கடந்த காலங்களில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் அமைக்கப்பட்ட பாலர் பாடசாலைக் கட்டடம்,மகளீர் கூட்டுறவுச் சங்கப் பொதுக் கட்டடம் என்பனவே திறந்துவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக சுவிடன் கூட்டுறவு நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் தே.பயூரன் வவுணதீவுப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கா.சுப்பிரமணியம்,காவியா பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி அ.யோகமலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X