2025 மே 05, திங்கட்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர்களின் மனிதாபிமான துணிச்சலுக்கு பாராட்டு

Super User   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, ரீ.எல்.ஜவ்பர்கான்

பொலிஸ் உத்தியோகத்தர்களின் மனிதாபிமான துணிச்சலை பாராட்டி மட்டக்களப்பில் கௌரவிக்கப்பட்டனர். கல்லடி புதிய பாலத்தில் தற்கொலை செய்வதற்காக விழுந்த பெண்ணை காப்பாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே பாராட்டப்பட்டனர்.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு, மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு வர்த்தக சங்கம் ஆகிய இணைந்து கௌரவிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, பொலிஸ் திணைக்களத்தின் நலன்புரி பிரிவுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பெர்ணான்டோ மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தில் தற்கொலை செய்வதற்காக விழுந்த பெண்ணை காப்பாற்றிய போக்குவரத்து பிரிவு பொலிஸாரான கே.எம்.எம்.பண்டார மற்றும் ஏ.பி.ஜெயசிங்க ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X