2025 மே 05, திங்கட்கிழமை

மடு சரிந்தமையினால் சிறுவன் பலி

Super User   / 2013 செப்டெம்பர் 01 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்


வீட்டில் தோண்டப்பட்ட மடு சரிந்து விழுந்தமையினால் ஐந்து வயது சிறுவன் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

புதிய காத்தான்குடி மூன்றாம் குறுக்கு வீதியை சேர்ந்த தஸ்லீம் முகம்மட் ஆதில் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டின் முற்றத்திற்கு மண் இடுவதற்காக தோண்டப்பட்ட மடுவினுள் குறித்த சிறுவனும் அவருடைய சகோரரும் இறங்கியுள்ளனர்.

இதன்போது மடு சரிந்து வீழ்ந்தமையினால், குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த சிறுவனின் ஆறு வயதான சகோதரர் தமீஸ் மற்றும் மாமா ஏ.சீ.அஸீம் ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0

  • mattakkalappaan Monday, 02 September 2013 03:24 AM

    அவதானம் இன்றேல் ஆபத்து அதிகம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X