2025 மே 05, திங்கட்கிழமை

உணவு விஷமானதால் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உணவு விஷமானதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி கிராமத்தின் நாவலர் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பி. குகதீஸ்வரன் (கணவன்-வயது 20), தங்கமணி (மனைவி- வயது 20), கோபிராஜ் (மகன்-வயது 05) ஆகியோரே இவ்வாறு சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி மூவரும், இரவு உணவை உட்கொண்ட பின்னர் மயக்கமடைந்த நிலையில் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X