2025 மே 05, திங்கட்கிழமை

பிர்தௌஸ் பள்ளிவாயலில் எட்டு வருடங்களின் பின் தொழுகை

Kogilavani   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சுனாமி அனர்த்தத்தினால் சேதமடைந்த காத்தான்குடி பிர்தௌஸ் பள்ளிவாயல் புனரமைக்கப்பட்டு எட்டு வருடங்களுக்கு பின்பு தொழுகை ஆரம்பிக்கப்பட்டது.

புதிய காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையிலுள்ள இப்பள்ளிவாயலானது 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக சேதமடைந்தது.

புனரமைப்பின்றி கடந்த எட்டு வருடங்களாக காணப்பட்ட இப்பள்ளிவயாலினை  பிரதேசத்திலுள்ள மீனவர்கள் ஒன்றினைந்து புனரமைப்பு செய்துள்ளனர்;.

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை (1) மீண்டும் தொழுகை நடவடிக்கைகள் இப்பள்ளிவாயலில் ஆரம்பிக்கப்பட்டன.

அஷர் தொழுகையினை காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரி அதிபர் அப்துல்லா ஆலிம் றஹ்மாணி ஹசரத் நடத்தி வைத்தார்.

இதன்போது காத்தான்குடி ஜாமியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பாலஹி உட்பட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X