2025 மே 05, திங்கட்கிழமை

குழாய்க்கிணறுகள், மலசலகூடங்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, புதிய காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், பூநொச்சிமுனை ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட மலசலகூடங்களும் குழாய்க்கிணறுகளும் பொதுமக்களிடம் நேற்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மலசலகூடங்களையும்  குழாய்க்கிணறுகளையும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு  அமைத்து வழங்கி வருகின்றது.

மேற்படி பிரதேசங்களில் வாமி நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்தக மலசலகூடங்களும் குழாய்க்கிணறுகளும் அமைக்கப்பட்டன. 

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா, மேற்படி பிரதேசங்களில் அமைக்கப்பட்ட மலசலகூடங்களையும் குழாய்க்கிணறுகளையும் பார்வையிட்டதுடன், இவற்றினை பயனாளிகளிடம் கையளித்தார்.

மேற்படி பிரதேசங்களில் 5 மலசலகூடங்களும் 6 குழாய்க்கிணறுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X