2025 மே 05, திங்கட்கிழமை

காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களில் சிலர் மேற்கொண்ட வேலைநிறுத்தம்  நேற்று புதன்கிழமை மாலை முடிவுக்கு வந்தது.

தங்களுக்கு வழங்கப்படாதுள்ள 3 மாதச் சம்பள நிலுவையை வழங்குமாறு கோரி காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் நேற்று புதன்கிழமை காலையிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான காத்தான்குடி பஸ் டிப்போவில் கடமையாற்றி வருகின்ற 50 இற்கும் மேற்பட்ட ஊழியர்களே  இவ்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் பிராந்திய முகாமையாளர் எம்.நசீர் தலைமையில் காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களுடான சந்திப்பொன்று  நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களுக்கு வழங்கப்படாதுள்ள 3 மாதச் சம்பளத்தில் 2 மாதச் சம்பளத்தை இம்மாதம் 10ஆம் திகதி வழங்குவதென உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை கைவிட்டனர்.

இச்சந்திப்பில்; காத்தான்குடி பஸ் டிப்போ முகாமையாளர் ஏ.எம்.அப்துல் றஹீம்,  காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க, பஸ் டிப்போ அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பஸ் டிப்போவில் கடமையாற்றி வருகின்றன 89 ஊழியர்களுக்கு 3 மாதச் சம்பளம் வழங்கப்படாமை உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X