2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இளைஞர் பிரதிநிதி ஆதில் வாக்கிர்மாக்கார் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களது பிரச்சினைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களைச் சந்தித்து ஆராய்ந்துள்ளார்.

இம்மாதம் 18ஆம் திகதி நியூயோக் நகரில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா.சபையின் மாநாட்டில் இலங்கையின் இளைஞர் நடவடிக்கைகள் தொடர்பாக இவர் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்நிலையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாவட்ட ரீதியாகச் சென்று இளைஞர்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றார்.

இதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுடான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையில் உதவி;ப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் புதன்கிழமை (4) இடம்பெற்ற இக் கலந்துiராடலில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள், இளைஞர் கழகத் தலைவர்கள், பாடசாலை இளைஞர் கழக பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தினர்.

இச்சந்திப்பில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி ஜே.கலாராணி, ஆலிதீன் ஹமீர் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X