2025 மே 05, திங்கட்கிழமை

இந்திய சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்தில் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாகத் தருவிக்கப்பட்ட சிகரட்டுக்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரைத் தாம் இன்று கைது செய்திருப்பதாக கல்முனை போதைப் பொருள் ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கள்ளச்சாரம் விற்பனை செய்வதாக தமக்குக் கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபரின் வீட்டைச் சுற்றி வளைத்த போது இந்தியத் தயாரிப்பான 200 சிகரட்டுக்களை மீட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் இன்று வியாழன் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கல்முனை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. சோமகுமார, பொலிஸ் கான்ஸ்டபிள்களான எஸ். அப்துல்ஜவாத், எம். இஸ்மத், டபிள்யூ. பியலால் ஆகியோரடங்கிய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரே கல்முனைப் பொலிஸ் பிரிவில் இந்த சுற்றிவளைப்புத் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X