2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

Super User   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமாகியுள்ளார்.

உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் டுபாய் வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள சுற்றுல்லா தொடர்பிலான விசேட மகாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே சென்றுள்ளார்.

இந்த மகாநாட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பிரதிநிதியாகவே பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொள்ளவுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற  இலங்கை ஹோட்டல் கல்லூரியை எமிரேட்ஸ் ஹோட்டல் பல்கலைக்கழகத்துடன் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளிலும் பிரதி அமைச்சர் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X