2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாருக்கான தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி ஆரம்பம்

Super User   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன், சிவம் பாக்கியநாதன், ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பில் பொலிஸாருக்கான தமிழ் மொழி டிப்ளோமா பாட பயிற்சி நெறி நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கல்லடியிலுள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இந்த தமிழ் மொழிமூல பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரனினால் இந்த பயிற்சி பாடநெறி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி ஐ.பி.தினேஸ்குமாரசிங்க மற்றும் தமிழ் மூல டிப்ளோமா நெறிக்கான பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி.பேரின்பராசா, மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.அஜித் பிரசன்னா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தமிழ் மொழி மூல பயிற்சி பாடநெறியில் 108 சிங்கள பொலிஸார் கலந்துகொண்டுள்ளனர். இது 7ஆவது தடவையாக கல்லடியிலுள்ள பொலிஸ் பயிற்சி கல்லாரியில் இடம்பெறுகின்றமை குறி;ப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X