2025 மே 03, சனிக்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதால் மக்கள் சிரமம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளது.

இதனால் எரிபொருள் கொள்வனவிற்காக வரும் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து செல்வதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
டீசல், மண்ணெண்ணெய், பெற்றோல் ஆகிய எரிபொருட்கள் இங்கு விநியோகிக்கப்படுகின்றன.

வவுணதீவு பிரதேசத்திலிருந்தும் எனைய பிரதேசங்களில் இருந்தும் வாகனங்கள் இங்கு எரிபொருள் நிரப்புவதற்காக வருகின்றன.

இந்நிலையில் இவ் எரிபொருள் நிலையம் மூடப்பட்டு கிடப்பதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக வாகன சாரதிகள், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை உடனடியாக திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X