2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யானை தாக்கி குடும்பஸ்தர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலையாறு பிரதேசத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விவசாயத் தொழிலை மேற்கொண்டுவரும் 3 பிள்ளைகளின் தந்தையான  கே.கணபதிப்பிள்ளை என்பவரே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை  அதிகாலை தனது  வீட்டுக்கு அருகிலுள்ள  வீட்டை யானை ஒன்று தாக்கிக்கொண்டிருந்தபோது,  அந்த யானையை துரத்துவதற்கு முயற்சித்த வேளையிலேயே இவரை யானை தாக்கியுள்ளது.

இந்த யானையின் தாக்குதலில்  வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. இருப்பினும் சேதமடைந்த வீட்டிலிருந்தவர்கள் தப்பியுள்ளனர்.

யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .