2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாண திணைக்களங்களிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் - 111 பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்வாறு விண்ணப்பங்களைக் கோரியுள்ள மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு, விண்ணப்பிக்கும் பட்டதாரி ஒருவர் தான் வேலையற்ற பட்டதாரியாக உள்ளார் என்பதை  ஆவணங்கள்  மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையையும் முன்வைத்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் 3;1.10.2013 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இதற்கு விண்ணப்பிக்கும் 21 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் தாம் வேலையற்ற பட்டதாரி என சத்தியக் கடதாசியைச் சமர்ப்பிப்பிக்க வேண்டும்.

இதனை அவர் வதியும் பிரதேச செயலாளரிடமிருந்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரினால் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் ஆள்; தெரிவு இடம்பெறும். மாவட்ட ரீதியாக வெற்றிடம் நிரப்பும்போது மாவட்ட இன  விகிதாசாரம் பேணப்படும் என்றும் இது தொடர்பான அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் வெளியான பின்னர் கருத்துத் தெரிவித்த  வேலையற்ற பட்டதாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களில் நல்ல பதவிகளில் உயர்ந்த சம்பளத்தில் பணிபுரியும் ஒரு பட்டதாரி தான் வேலையற்ற பட்டதாரி என்றே சான்றிதழைச் சமர்ப்பிப்பார். அதேவேளை எந்த வேலையும் இன்றியிருக்கும் தம்மைப் போன்றவர்களும் தாம் வேலையற்ற பட்டதாரி என்ற சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருப்பதால் இந்த நிபந்தனைகள் தங்களை வீண் அசௌகரியத்துக்குள்ளாக்கும் என்றும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .