2025 மே 03, சனிக்கிழமை

பாதசாரிக் கடவையில் விபத்து; மாணவி படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் நகர மத்தியில் கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் இன்று  திங்கட்கிழமை இடம்பெற்றுள்ள  விபத்தில் மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி பயிலும் பதுர் பாத்திமா  (வயது 12) என்ற மாணவியே விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவி பாதசாரிக் கடவையில் வீதியைக் கடந்துகொண்டிருந்தபோது, அவர் மீது எல்ப் ரக வாகனம்   ஒன்று வந்து  மோதியுள்ளது.

இந்த மாணவி வீதியை பாதசாரிக் கடவை ஊடாக கடப்பதற்காக இந்த எல்ப் ரக வாகனம் இடமளித்து தரித்து நின்றுள்ளது.  இதன்போது வேகமாக வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து எல்ப் ரக வாகனத்தின் மீது மோதியதால், எல்ப் ரக வாகனம் சிறுமி மீது  மோதி விபத்திற்குள்ளானதாக  சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியின் சாரதி  பஸ் வண்டியை செலுத்திச் சென்று தப்பியுள்ளதால் அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த இடத்தில் பதற்றம் அதிகரிக்கவே உடனடியாக பொலிஸாரும் படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்புர சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.




You May Also Like

  Comments - 0

  • Ashraff Monday, 21 October 2013 02:46 PM

    சி.டி.பி. சாரதிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X