2025 மே 03, சனிக்கிழமை

கடமை தவறிய கான்ஸ்டபிள் இடைநிறுத்தம்

Super User   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பிரதேசத்தில் பாதசாரி கடவையில் கடமை மேற்கொள்ள தவறிய பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஏறாவூர் நகரின் பிரதான வீதியிலுள்ள பாதசாரி கடவையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் மாணவி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி பயிலும் பதுர் பாத்திமா என்ற மேற்படி மாணவி பாதசாரிக் கடவை அடையாளமுள்ள மஞ்சள் கோட்டைக் கடக்கும் போது வாகனமொன்றுடன் மோதியுள்ளார்.

இந்த பாதசாரிக் கடவையில் கடமை புரிவதற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் விபத்து இடம்பெற்ற சமயம் சம்பவ இடத்தில் கடமையில் இருந்திருக்கவில்லை.

அதனாலேயே அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பட்டு அவர் கடமையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பர தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X