2025 மே 03, சனிக்கிழமை

விகாரைக்கு பள்ளிவாயல் முச்சக்கர வண்டி அன்பளிப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை நூரியா பள்ளிவாயல் நிருவாகத்தினரால் ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரைக்கு முச்சக்கர வண்டியொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இன நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்த முச்சக்கர வண்டி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் எம்.பதுர்தீன் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி பூஜ நாவாநே அபயவன்ஸ லங்கார தேரரிடம் முச்சக்கர வண்டியை ஒப்படைத்தனர்.

இதேவேளை, யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையினால் வருடாந்தம் நடாத்தப்படும் வீதி ஊர்வல உற்சவமும் அன்னதான நிகழ்வும் நேற்றும் இன்றும் இடம்பெற்றது.

நேற்று திங்கட்கிழமை மாலை வாழைச்சேனை துறைமுக சந்தியில் இருந்து ஆரம்பமான வீதி ஊர்வலம் வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையை வந்தடைந்ததுடன் இன்று விஷேட பூஜைகள் விகாரையின் பிரதம விகாராதிபதி பூஜ நாவாநே அபயவன்ஸ லங்கார தேரோ தலைமையில் இடம்பெற்றதோடு அன்னதானமும் இடம பெற்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X