2025 மே 03, சனிக்கிழமை

தமிலமீவு எரிபொருள் நிலையம் வெள்ளிக்கிழமை மீளத் திறக்கப்படும்

Super User   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.எம்.ஹுசைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு, தமிலமீவு எரிபொருள் நிரப்பும் நிலையம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீளத் திறக்கப்படும் என கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எம்.நவரஞ்சன் தெரிவித்தார்.

இந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நவீன இயந்திரத்தின் மூலம் எரிபொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக எமது சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து இயந்திரம் பொருத்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன என அவர் தெரிவித்தார்.

இந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தை நாம் ஒரு தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியிருந்தோம். அதை தற்போது எமது கூட்டுறவுச் சங்கம் மீளப்பெற்று அதை நவீனமயப்படுத்தி 24 மணி நேர சேவையுடன் மீளவும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என பொதுமுகாமையாளர் எம்.நவரஞ்சன் மேலும் தெரிவித்தார்.

திமிலதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்ததை தமிழ்மிரர் இணையத்தளம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X