2025 மே 03, சனிக்கிழமை

வின்சன் தேசிய பாடசாலைக்கு தேசிய விருது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

2012 தேசிய வாசிப்பு மாத வேலைத் திட்டத்தின்கீழ் சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்தியதற்காக மட்டக்களப்பு வின்சன் உயர்தர மகளீர் தேசிய பாடசாலை  தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேசிய வாசிப்பு மாதமாக அக்டோபர் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த மாதம், தேசிய பாடசாலைகளில் வாசிப்பு சார்ந்து மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் அடங்கிய அறிக்கையினை மாத முடிவில் கல்விச் சேவைகள்
அமைச்சுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இந்த அறிக்கை ஆதாரங்களைக் கொண்டு வாசிப்பு மாதத்தில் சிறந்த செயற்பாடுகளை வெளிபடுத்திய பாடசாலைகளை தேசிய விருதுக்காக பரிந்துரை செய்யப்படும்.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்தியமைக்காக மட்டக்களப்பு வின்சன் தேசிய விருதுக்கு பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

இவ்விருது எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தலைமையில் இடம்பெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வில் வைத்துவழங்கி வைக்கப்படவுள்ளது.

இதேவேளை,  கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில தினப் போட்டியில் மட்டக்களப்பு வின்சன் உயர்தர மகளீர் தேசிய பாடசாலை 79 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X