2025 மே 03, சனிக்கிழமை

தியாகம் செய்தவர்களின் நினைவாக தூபி அமைக்க தீர்மானம்

Super User   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் நினைவாக தூபி அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் ஓட்டமாவடி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது நினைவுத் தூபி அமைத்தல் தொடர்பில் பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபரினால் பிரேரணையொன்று சமர்பிக்கப்பட்டது. குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நினைவுத் தூபியை நாவலடி (திருக்கொண்டியாமடு) சந்தியில் அமைப்பதென்றும் இது தொடர்பாக பிரதேசத்தில் உள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளும் பெறுவது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்குடா தெகுதியில் இருந்து இராணுவம் மற்றும் பொலிஸில் சேவையின் ஊடாக உயிர்த் தியாகம் செய்தவர்களின் பெயர்களையும் நினைவுத் தூபியில் குறிக்கவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிரேரணை தொடர்பில் பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் கருத்து தெரிவிக்கையில்,

" 'இன்று சில சிங்கள அமைப்புக்களின் தலைவர்கள் நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழிக்கும் போராட்டததில் முஸ்லிம் சமுகம் எந்தவிதப் பங்களிப்பையும் செய்யவில்லை என்கின்றனர். இந்த அப்பட்டமான பொய்ப் பிரச்சாரங்களிற்கு எதிராகவும் நமது பிரதேசத்தில் இருந்து நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் நினைவாக நினைவுத் தூபி நிர்மாணிக்க வேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X