2025 மே 03, சனிக்கிழமை

மட்டு. வலையிறவுப்பாலம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார், எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு வலையிறவுப்பாலம் இன்று திங்கட்கிழமை (28) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வலையிறவுப் பாலத்தை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவும்  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தும் இணைந்து திறந்துவைத்துள்ளனர்.

108 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வலையிறவுப்பாலமானது  படுவான்கரையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பிரதான பாலம் ஆகும்.

இந்த நிகழ்வில்  கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.ஸ்.உதுமாலெவ்வை, ஹாபீஸ் நசீர் அகமட், விமலவீர திஸநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் றிடோ யே ஒசிலுவன்,  மட்டக்களப்பு மவாட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X