2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எல்.ஜவ்பர்கான்

'சகல சமுகங்களின் சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதே அமைதியான வாழ்வாகும்' எனும் தொனிப்பொருளில் முதன்முறையாக இலங்கை திறந்த பல்கலைகழகம் ஆரம்பித்துள்ள சமுக நல்லிணக்க கற்கை நெறியினை நாடளாவிய ரீதியில் 200 மாணவர்கள் பூர்த்தி செய்துள்ளனர்.

திறந்த பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய நிலையத்திலிருந்து 100 மாணவர்களும் நாடளாவிய ரீதியில் திறந்த பல்கலைக்கழகங்களிலிருந்து 100 பேருமாக 200 பேர் இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்துள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழக மட்டக்களப்பு பிராந்திய நிலைய பாடவிதான இணைப்பாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் தெரிவித்தார்.

கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களின் சமுக நல்லிணக்க கலாசார விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் ஞாயிற்றுக்கிழமை திறந்த பல்கலைக்கழக மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் கலாநிதி ஹூஸைன் இஸ்மாயில், பேராசிரியர் சி.மௌனகுரு, திறந்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .