2025 மே 03, சனிக்கிழமை

பிரதியைமச்சர் முரளிதரன் அழைக்கப்படாமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு வலையிறவுப் பாலத்தின் திறப்பு விழா வைபவத்திற்கு மீள்குடியேற்ற பிரதியைமச்சர் முரளிதரன் அழைக்கப்படாதை கண்டித்து இன்று பொதுமக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வலையிறவுப் பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்பாலத்தின் திறப்பு விழா நிகழ்விற்கு பிரதியமைச்சர் அழைக்கப்படவில்லை என்றுக்கூறி இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் அம்மான் எங்கே', 'மட்டு. மண்ணின்; மைந்தன் அழைக்கப்படவில்லையா', 'மாவட்ட அமைச்சருக்கு அழைப்பில்லாமல் திறப்பு விழாவா' போன்ற வாசகங்கள்; எழுதப்பட்ட பதாதைதைகளை தாங்கியிருந்தனர்.



You May Also Like

  Comments - 0

  • VALLARASU.COM Tuesday, 29 October 2013 06:48 AM

    பாவம் ஐயா... அப்பாவி குடிமக்களின் கண்களை பார்த்தாலே தெரிகிறது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X