2025 மே 03, சனிக்கிழமை

முள்ளாமுனைப் பாலம் திறப்பு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 28 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு, கிழக்கு மாகாண சபை என்வற்றினுடாக கிழக்கு, வடமத்திய மாகாண வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயித்தியமலை, முள்ளாமுனைப் பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஏ.எஸ்.உதுமான்லெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பாலத்தை திறந்துவைத்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் றிட்டா ஏ.ஒசுல்லிவன் கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதி ஆலொசகருமாகிய சி.சந்திரகாந்தன், மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மன்சூர் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை வீதி அபிவிருத்தித் திணைக்கள கிழக்கு மாகாண அலுவலகம், மாவட்ட பிரதம பொறியியலாளர் பணிமனை என்பன திறந்துவைக்கப்பட்டது. 311 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட குறித்த அபிவிருத்தித் திட்டங்களே இன்ற திறந்துவைக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X