2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நவீன மீன்சந்தைக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஓட்டமாவடி பிரதேசசபைப் பிரிவில் நவீன மீன்சந்தைக் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நேற்று திங்கட்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.

 'புறநெகும' திட்டத்தின் 2 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள மீன்சந்தைக் கட்டிடத்தொகுதியில், வாகனத் தரிப்பிடம் உட்பட 40  கடைகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக பிரதேசசபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

மிக நீண்டகாலமாக இந்தப் பிரதேசத்தில் உள்ள மீன் வியாபாரிகளுக்கு நிரந்தரக் கட்டிடம் இல்லாமல், பிரதேசசபையால் அமைத்துக் கொடுத்த தற்காலிகக் கொட்டில்களிலேயே தங்களது வியாபாரத்தை மேற்கொண்டுவந்தனர்.

ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • VALLARASU.COM Tuesday, 29 October 2013 06:53 AM

    ஐயய்யோ... இவ்வளவு பேருக்கும் பங்கா? நிதி பற்றாக்குறை காரணமாக கட்டிடம் எப்படியும் இடைநிருத்தப்படலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .