2025 மே 03, சனிக்கிழமை

பிளாஸ்திக் சத்திரசிகிச்சை முகாம் நடத்த ஏற்பாடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு றொட்றிக்கழகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இலவச பிளாஸ்திக் சத்திரசிகிச்சை முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி முதுல் 19ஆம் திகதி வரை இவ் இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாம் நடத்தப்படவுள்ளது.

இம்மருத்துவ முகாமிற்காக இங்கிலாந்து நாட்டின் இன்ரர்பிளாஸ்ட் யூகே இல் இருந்து மருத்துவர் குழுவினர் வருகை தரவுள்ளனர்.

இவர்கள் உதடு, அண்ணப்பிளவு மட்டும் எரிகாயங்களால் ஏற்பட்ட அகோரமான வடுக்கள் பிறப்பில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்டவற்றுக்கான சீரமைப்பு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை தேவைப்படுவோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர் ஜீப்ராவின் கிளினிக்கில் செவ்வாய்க்கிழமைகளில் காலை 8 மணிமுதல் பெயர்களைப் பதிவு செய்யுமாறு மட்டக்களப்பு றொட்றிக்கழகத்தின் தலைவர் எஸ்.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறிப்பிட்ட தொகையினருக்கே சத்திரசிகிச்சைகள்  மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவாகப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X