2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

தைக்கப்பட்ட ஆடைக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 03 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தைக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் விற்பனையும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மட்டு. செட்டிபாளையம் திலகவதியார் இல்லக் கட்டிடத்தில் நடைபெற்றது.

அவுஸ்திரேலிய மகளிர் இல்லத்தின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு சமூக நலன்புரி அமைப்பின் மூலம் மட்டு. செட்டிபாளையம் திலகவதியார் இல்லக் கட்டிடத்தில்  தாய், தந்தையை இழந்த மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற யுவதிகளுக்கு இலவச தையல் பயிற்சிநெறி நடத்தப்பட்டது. இதில்; ஒருபகுதி யுவதிகள் தமது பயிற்சிநெறியினை கடந்த 31ஆம் திகதியுடன் நிறைவுசெய்தனர்.

இக்கண்காட்சியானது இந்த யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணர்வதோடு, அவர்களின் தொழில் முயற்சிகளுக்கு ஒரு ஊக்குவிப்பாகவும் அமைந்துள்ளன என மட்டக்களப்பு சமூக நலன்புரி அமைப்பின் இணைப்பாளர் க.பிரதீஸ்பரன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X